சல்மான் கான் திருமணத்தி்ற்கு பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ரியாலி்ட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விவரம் வருமாறு,
இந்த ஷோவில் கலந்து கொள்ள உங்களை தூண்டியது எது?
இந்த
ஷோவின் கான்செப்ட் எனக்கு பிடித்திருக்கிறது. இதில் தம்பதிகள் மற்றும்
அவர்கள் உறவு எப்படி தவறான பாதையில் சென்று முடிகிறது என்று
காண்பிக்கிறீர்கள். இதன் மூலம் தம்பதிகள் தங்கள் கருத்து வேறுபாடுகளை
களைந்து உறவை பலப்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு உறவில் உள்ளவர்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
உறவின்
முக்கிய அம்சமே நம்பிக்கை தான். நம்பிக்கையை காப்பாற்றாவிட்டால் அந்த உறவு
முறிகிறது. கருத்துப் பறிமாற்றம் முறையாக இல்லையென்றாலும் பிரச்சனை தான்.
முந்தையை சீசன் நிகழ்ச்சிகளில் ஏமாற்றுபவர்களை கையும், களவுமாகப் பிடிப்பதைப் பார்த்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஒருவரின்
நம்பிக்கை காப்பாற்றப்படாததைப் பார்ப்பது மனதிற்கு சங்கடமாகத் தான்
இருக்கும். இது வெறும் தம்பதிகள் சம்பந்தப்பட்டதல்ல. அவர்கள் குடும்பம்,
நண்பர்கள் மற்றும் சமுதாயம் சம்பந்தப்பட்டது. இந்த ஷோ மூலம் அவர்கள் பாடம்
கற்றுக் கொண்டால் நல்லது.
நீங்கள் ஏற்கனவே உறவுகளில் இருந்துள்ளீர்கள், நம்பிக்கை துரோகம் செய்வது எப்பொழுதாவது உங்கள் நினைவில் வந்ததுண்டா?
உறவில்
இருப்பவர்கள் கணிசமான நேரத்தை ஒன்றாக செலவிடாவிடில் அல்லது சரியாக
கருத்துப் பரிமாற்றம் இல்லை என்றால் அவர்கள் உறவு கெட்டு, நம்பிக்கை
துரோகம் செய்ய வாய்ப்புண்டு.
உலகக் கோப்பையில் கலக்கிய பிறகு மேற்கிந்திய தீவுகளில் விளையாடிக் கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தால்...
எனது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நான் விளையாடச் செல்லவில்லை. பிட்டாக இருப்பது தான் விளையாட்டு வீரருக்கு முக்கியம்.
நடந்து முடிந்த ஐபிஎல்-ல் பூனே அணியின் கேப்டனாக இருந்தும் ஆட்டம் திருப்திகரமாக இல்லையே. ஓய்வின்றி விளையாடுவது தான் காரணமா?
கடந்த
சில ஆண்டுகளாக நாங்கள் அதிகமாகத் தான் விளையாடுகிறோம். ஒருவர் ஓய்வு
எடுக்கையில் மற்றொரு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கின்றது. குறிப்பாக சீனியர்
வீரர்கள் ஓய்வெடுத்தால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
டோணி திருமணம் செய்து கொண்டார், உங்கள் பெற்றோர் உங்களை வலியுறுத்தவில்லையா?
சல்மான் கான் திருமணம் செய்து கொண்ட பிறகு தான் நான் திருமணம் செய்து கொள்வேன்.
No comments:
Post a Comment