Wednesday, August 31, 2011

கோண்டாவிலில் பகல் வேளை மாட்டிக் கொண்ட மர்ம மனிதன் (படங்கள் இணைப்பு)

கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலயப் பகுதியில உள்ள வீடொன்றில் பிற்பகல் வேளையில் சந்தேகத்துக்கிடமான முறையில் பதுங்கியிருந்த இரு மர்மமனிதர்களை வீட்டிலிருந்தவர்கள் கண்டதைத் தொடர்ந்து தப்பி ஓடிய நிலையில், அவர்களில் ஒருவர் அந்தப் பகுதி இளைஞர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். மற்றவர் தப்பி ஓடிவிட்டார்.

இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இசம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக இராணுவத்தினர் விரைந்து வந்து மர்ம நபரைக் கொண்டு செல்ல எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதயில் கூடிய பொது மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கோண்டாவில் பகுதி பெரும் பதட்டமான நிலையில் காணப்பட்டது.

சந்தேகத்துக்கிடமான முறையில் பதுங்கியிருந்தவர்களில் மாட்டிக்கொண்ட இளைஞரை அப் பகுதி இளைஞர்கள் வாசிகசாலையினும் அடைத்துப் பூட்டி விட்டனர். நேரம் செல்லச் செல்ல அதனைப்பார்வையிட வந்த பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கம் இடையே வாக்கு வாதங்கள் ஏற்படத் தொடங்கியது.

இந் நிலையில் அந்தப் பகுதிக்கு அழைக்கப்பட்ட மேலதிக இராணுவத்தினர் துப்பாக்கிகள் பொல்லுகளுடன் வந்து பொதுமக்களைத் தாக்கத் தொடங்கினர்.

அங்கு நின்ற மேஜர் தர அதிகாரி ஒருவரின் தலையீட்டினால் படையினர் கட்டுப்படுத்தப்பட்டதுடன் வன் முறைகள் மேலும் தொடரா வண்ணம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கோப்பாய் பொலிஸ் நிலைய சப் இன்ஸ்பெக்கரர் வந்தபோதிலும் கைகூடாத நிலையில் ஊரெழுவில் நிலை கொண்டுள்ள 511 வது படையணியின் கட்டளை அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்கள் முன்னிலையில் பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

குறிப்பிட்ட மர்ம நபர் மிகவும் இளையவராகக் காணப்பட்டார். பொதுமக்கள் இவரைக் கடுமையாகத் தாக்கிய போதும் அவர் வாய் திறக்கவேயில்லை.

பொலிசார், இராணுவத்தினர் ஏதாவது கேட்டால் மட்டும் பதிலளித்துக் கொண்டிருந்தார். அங்கு கூடிய மக்களில் பலரும் அவரைப் படமெடுக்க முயன்ற போது முகத்தைக் காட்டிக்கொள்ளாமல் திரும்பி விட்டார்.

பொலிசாரும் , இராணுவத்தினரும் கூட இவரைபடம் எடுக்க அனுமதிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும். சம்பவத்தின் போது பொல்லுகளுடன் மக்களை படையினர் துரத்திய வேளையில் ஏற்றபட்ட பதற்றத்தினால் பல மோட்டார் சைக்கிள்களும், சைக்கிள்களும் சிதறிப் போயிருக்கின்றன.





இச்ச்சம்பவம் பற்றி கோப்பாய் பொலிசாரிடம் தொடர்பு கொண்ட போது இவ்வாறு ஒரு சம்பவம் இடம் பெற்றதாக தெரிவித்த அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது அவர் சிங்கள இளைஞன் எனத்தெரியவந்தது. உடனடியாக கைது செய்த குறித்த நபரை சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபரை நாளை யாழ் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment