மாணவியின் உயிரைப் பறித்த தலைமைத்துவப் பயிற்சி!
இலங்கை அரசினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற தலைமைத்துவ பயிற்சியில் பங்கேற்ற மாணவி ஒருவர் பதுளை வைத்தியசாலையில் உயிர் இழந்து உள்ளார். நிசாந்தி மதுஷானி ( வயது - 24 ) என்பவரே இறந்து உள்ளார். இவர் தியாத்தலவத்த இராணுவ முகாமில் கடந்த ஜூன் 29 ஆம் திகதி பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது மயக்கமடைந்து விழுந்து விட்டார்.
பின் பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இவர் தூசி நிறைந்த சூழலில் தங்கி இருந்தபோது சுவாசப் பைகளுக்குள் கிருமிகள் புகுந்ததால் மரணம் ஏற்பட்டிருக்கின்றது வைத்தியசாலை அறிக்கை கூறுகின்றது
No comments:
Post a Comment