Thursday, August 25, 2011

பெண்ணாக மாற்றப்படும் ஆண்: கொழும்பில் நடைபெறும் சத்திர சிகிச்சை

ஆண்களுக்குரிய ஹோமோன்களுடன் பெண்ணாய்ப் பிறந்த 8 வயது சிறுமியை பெண்களுக்குரிய ஹோமோன்கள் உடையவராக மாற்றும் சத்திரசிகிச்சையொன்று தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சத்திர சிகிச்சை 8 மணித்தியாலங்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட வைத்தியர்கள் மூவருடன் வெளிநாடுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்று இதனை மேற்கொள்கிறது.

பெண்களுக்குரிய ஹோமோன்கள் சுரக்கும் வண்ணம் முழுமையான சிறுமியாக மாற்றுவதற்குரிய அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொள்வதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்தார்.

இதேபோன்று பாலியல் ரீதியிலான குறைபாடுகளுடன் இலங்கையில் வருடாந்தம் 500 குழந்தைகள் பிரசவிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment