கோண்டாவில் வடக்கு தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலயப் பகுதியில உள்ள வீடொன்றில் பிற்பகல் வேளையில் சந்தேகத்துக்கிடமான முறையில் பதுங்கியிருந்த இரு மர்மமனிதர்களை வீட்டிலிருந்தவர்கள் கண்டதைத் தொடர்ந்து தப்பி ஓடிய நிலையில், அவர்களில் ஒருவர் அந்தப் பகுதி இளைஞர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டார். மற்றவர் தப்பி ஓடிவிட்டார்.
இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இசம்பவம் நடைபெற்ற இடத்திற்கு உடனடியாக இராணுவத்தினர் விரைந்து வந்து மர்ம நபரைக் கொண்டு செல்ல எடுக்கப்பட்ட முயற்சி அந்தப் பகுதயில் கூடிய பொது மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கோண்டாவில் பகுதி பெரும் பதட்டமான நிலையில் காணப்பட்டது.
சந்தேகத்துக்கிடமான முறையில் பதுங்கியிருந்தவர்களில் மாட்டிக்கொண்ட இளைஞரை அப் பகுதி இளைஞர்கள் வாசிகசாலையினும் அடைத்துப் பூட்டி விட்டனர். நேரம் செல்லச் செல்ல அதனைப்பார்வையிட வந்த பொது மக்களுக்கும் இராணுவத்தினருக்கம் இடையே வாக்கு வாதங்கள் ஏற்படத் தொடங்கியது.
இந் நிலையில் அந்தப் பகுதிக்கு அழைக்கப்பட்ட மேலதிக இராணுவத்தினர் துப்பாக்கிகள் பொல்லுகளுடன் வந்து பொதுமக்களைத் தாக்கத் தொடங்கினர்.
அங்கு நின்ற மேஜர் தர அதிகாரி ஒருவரின் தலையீட்டினால் படையினர் கட்டுப்படுத்தப்பட்டதுடன் வன் முறைகள் மேலும் தொடரா வண்ணம் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கோப்பாய் பொலிஸ் நிலைய சப் இன்ஸ்பெக்கரர் வந்தபோதிலும் கைகூடாத நிலையில் ஊரெழுவில் நிலை கொண்டுள்ள 511 வது படையணியின் கட்டளை அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்கள் முன்னிலையில் பொலிசாரிடம் ஒப்படைத்தார்.
குறிப்பிட்ட மர்ம நபர் மிகவும் இளையவராகக் காணப்பட்டார். பொதுமக்கள் இவரைக் கடுமையாகத் தாக்கிய போதும் அவர் வாய் திறக்கவேயில்லை.
பொலிசார், இராணுவத்தினர் ஏதாவது கேட்டால் மட்டும் பதிலளித்துக் கொண்டிருந்தார். அங்கு கூடிய மக்களில் பலரும் அவரைப் படமெடுக்க முயன்ற போது முகத்தைக் காட்டிக்கொள்ளாமல் திரும்பி விட்டார்.
பொலிசாரும் , இராணுவத்தினரும் கூட இவரைபடம் எடுக்க அனுமதிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும். சம்பவத்தின் போது பொல்லுகளுடன் மக்களை படையினர் துரத்திய வேளையில் ஏற்றபட்ட பதற்றத்தினால் பல மோட்டார் சைக்கிள்களும், சைக்கிள்களும் சிதறிப் போயிருக்கின்றன.
இச்ச்சம்பவம் பற்றி கோப்பாய் பொலிசாரிடம் தொடர்பு கொண்ட போது இவ்வாறு ஒரு சம்பவம் இடம் பெற்றதாக தெரிவித்த அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தபோது அவர் சிங்கள இளைஞன் எனத்தெரியவந்தது. உடனடியாக கைது செய்த குறித்த நபரை சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபரை நாளை யாழ் நீதிமன்றில் ஆயர்படுத்தவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Wednesday, August 31, 2011
Thursday, August 25, 2011
பெண்ணாக மாற்றப்படும் ஆண்: கொழும்பில் நடைபெறும் சத்திர சிகிச்சை
ஆண்களுக்குரிய ஹோமோன்களுடன் பெண்ணாய்ப் பிறந்த 8 வயது சிறுமியை பெண்களுக்குரிய ஹோமோன்கள் உடையவராக மாற்றும் சத்திரசிகிச்சையொன்று தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சத்திர சிகிச்சை 8 மணித்தியாலங்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட வைத்தியர்கள் மூவருடன் வெளிநாடுகளைச் சேர்ந்த வைத்தியர்கள் குழுவொன்று இதனை மேற்கொள்கிறது.
பெண்களுக்குரிய ஹோமோன்கள் சுரக்கும் வண்ணம் முழுமையான சிறுமியாக மாற்றுவதற்குரிய அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொள்வதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்தார்.
இதேபோன்று பாலியல் ரீதியிலான குறைபாடுகளுடன் இலங்கையில் வருடாந்தம் 500 குழந்தைகள் பிரசவிப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன

Tuesday, August 2, 2011
10 மாதத்தில் 1000 க்கும் மேற்பட்ட பேஸ்புக் முறைப்பாடுகள்!
10 மாதத்தில் 1000 க்கும் மேற்பட்ட பேஸ்புக் முறைப்பாடுகள்!

இந்த புகார்கள் அனைத்தும் கடந்த 10 மாதத்துக்குள் கிடைக்கப்பெற்றதாக கூறியுள்ளார்.
கிடைக்கப்பெற்ற குறித்த முறைப்பாடுகளில் பத்து முறைப்பாடுகள் மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் துறைக்கு (Criminal Investigations Department) மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு இணைய வெளிகளில் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை slcert@slcert.gov.lkor என்ற இ.மெயில் முகவரியூடாகவோ அல்லது 0112691692 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாணவியின் உயிரைப் பறித்த தலைமைத்துவப் பயிற்சி!
மாணவியின் உயிரைப் பறித்த தலைமைத்துவப் பயிற்சி!

பின் பதுளை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இவர் தூசி நிறைந்த சூழலில் தங்கி இருந்தபோது சுவாசப் பைகளுக்குள் கிருமிகள் புகுந்ததால் மரணம் ஏற்பட்டிருக்கின்றது வைத்தியசாலை அறிக்கை கூறுகின்றது
பெற்றோர்களின் தோல்வி! தவறாக நடத்தப்படும் குழந்தைகள்
துப்பாக்கி சுடும் போது, சாண்ட்விச்சில், சுவரில் டேப் மூலம் ஒட்டியபடி, கொடிய விசப்பாம்புடன் இப்படியான இடங்களில் எல்லாம் குழந்தை இருக்கும் என்பது யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒன்று...
ஆனால் நம்ப முடியாத அளவுக்கு இருக்கின்றன இவை... தமது அன்புக் குழந்தைகளை பெற்றோர்கள் இப்படியாக நடத்துவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இப்படியான விடயங்களை வெளியில் கொண்டு வருவதற்காக சமூக நல ஆர்வலர்கள் ParentFails.com என்ற இணையத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த இணையத்தில் குழந்தைகளின் வேடிக்கை தருணங்கள், பெற்றோர்களால் தவறாக நடத்தப்படும் சம்பவங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

பழனியில் 1050 ரஜினி ரசிகர்கள் மொட்டை போட்டனர்
நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் திரும்பியதால், மகிழ்ச்சி அடைந்த அவருடைய ரசிகர்க்ள 1008 பேர் பழனியில் மொட்டை போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் தொழிலாளர் சங்க உறுப்பினர்களான இவர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றிய முருகனுக்கு முடிகாணிக்கை செலுத்தி பழனி சண்முக நதியில் நீராடினர். பின்னர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து கோயிலுக்கு பாதையாத்திரை மேற்கொண்டனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர்கள் இரண்டாயிரத்து ஐநூறு பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர் ஒருவர், எங்கள் அன்புத் தலைவர் ரஜினி அவர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்ப வேண்டும் என்பதற்காக 48 நாட்கள் விரதம் இருந்தோம். ரஜினி நலமுடன் திரும்பியதையடுத்து திருப்பூரில் இருந்து பழனி வந்த 1008 ரசிகர்களும் சண்முக நதியில் நீராடி முடி காணிக்கை செலுத்தி எங்களது வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறோம் என்றார்.

Subscribe to:
Posts (Atom)