Monday, June 20, 2011

இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையே நாளை முதல் டெஸ்ட்

Mahendra Singh Dhoni
கிங்ஸ்டன்: இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

மேற்கு
இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி டுவென்டி
20 போட்டியிலும், ஒரு நாள் போட்டித் தொடரையும் வென்றுள்ளது. இந்த
நிலையி்ல் நாளை டெஸ்ட் போட்டித் தொடர் தொடங்குகிறது.

3 போட்டிகளைக் கொண்ட தொடரில் நாளை முதல் டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெறவுள்ளது.

ஒரு
நாள் போட்டித் தொடரில் பங்கேற்காத கேப்டன் மகேந்திர சிங் டோணி, டெஸ்ட்
போட்டிகளுக்குத் திரும்பியுள்ளார். இதனால் இந்திய அணி வலுவடைந்துள்ளது.
இருப்பினும் முரளி விஜய் மற்றும் முனாப் படேல் நாளைய போட்டியில் ஆட
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருவரும் காயமடைந்துள்ளதால் இந்த நிலை.

ஏற்கனவே
சச்சின், வீரேந்திர ஷேவாக், கம்பீர், ஜாகிர்கான் ஆகியோர் இல்லாத நிலையில்
இருக்கிறது இந்தியா. இருப்பினும் இளம் வீரர்களை வைத்து டோணி டெஸ்ட் தொடரை
சமாளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

பயிற்சியின்போது முரளி விஜய்க்கு வலது கை விரலில் அடிபட்டுள்ளது. இதனால் அவர் ஆட முடியுமா என்பது சந்தேகம்தான். அதேபோல முனாப் படேல் வலது முழங்கையில் காயமடைந்துள்ளார்.

No comments:

Post a Comment