Monday, June 20, 2011

bhavana

இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையே நாளை முதல் டெஸ்ட்

Mahendra Singh Dhoni
கிங்ஸ்டன்: இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

மேற்கு
இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி டுவென்டி
20 போட்டியிலும், ஒரு நாள் போட்டித் தொடரையும் வென்றுள்ளது. இந்த
நிலையி்ல் நாளை டெஸ்ட் போட்டித் தொடர் தொடங்குகிறது.

3 போட்டிகளைக் கொண்ட தொடரில் நாளை முதல் டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெறவுள்ளது.

ஒரு
நாள் போட்டித் தொடரில் பங்கேற்காத கேப்டன் மகேந்திர சிங் டோணி, டெஸ்ட்
போட்டிகளுக்குத் திரும்பியுள்ளார். இதனால் இந்திய அணி வலுவடைந்துள்ளது.
இருப்பினும் முரளி விஜய் மற்றும் முனாப் படேல் நாளைய போட்டியில் ஆட
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருவரும் காயமடைந்துள்ளதால் இந்த நிலை.

ஏற்கனவே
சச்சின், வீரேந்திர ஷேவாக், கம்பீர், ஜாகிர்கான் ஆகியோர் இல்லாத நிலையில்
இருக்கிறது இந்தியா. இருப்பினும் இளம் வீரர்களை வைத்து டோணி டெஸ்ட் தொடரை
சமாளிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

பயிற்சியின்போது முரளி விஜய்க்கு வலது கை விரலில் அடிபட்டுள்ளது. இதனால் அவர் ஆட முடியுமா என்பது சந்தேகம்தான். அதேபோல முனாப் படேல் வலது முழங்கையில் காயமடைந்துள்ளார்.

முகமூடியில் ஜீவா

அடுத்தவர்கள் நடிக்க மறுத்த கதையில் நடிப்பது ஜீவாவுக்கு பெரிய ஹிட்களாக அமைந்திருக்கின்றன கடந்த காலத்தில்.

லேட்டஸ்ட் உதாரணம், கேவி ஆனந்த் இயக்கத்தில் வந்த கோ. இப்போது மீண்டும் அதேபோன்றதொரு வாய்ப்பு வந்துள்ளது ஜீவாவுக்கு.

அதுதான் முகமூடி. ஒரு சூப்பர் ஹீரோ கதை. இயக்குநர் மிஷ்கினின் கனவுப் படம் என்று நீண்ட நாட்களாகக் கூறப்பட்டு வரும் படம் இது!

இந்தப்
படத்துக்காக முதலில் சூர்யாவை அணுகினார் மிஷ்கின். ஆனால் அவர் நடிக்க
மறுக்க, அடுத்து ஆர்யா, விஷால் வரை போய்ப் பார்த்தார். ஒன்றும்
நடக்கவில்லை. சிம்புவைக் கூட சந்தித்தார் சில தினங்களுக்கு முன்.

கடைசியாக ஜீவா 'செட் ' ஆகியிருக்கிறார்.

மும்பையைச்
சேர்ந்த பெரிய கார்ப்பரேட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
ஸ்பெஷல் எபெக்ட்ஸை லாஸ் ஏஞ்சல்ஸ் நிறுவனம் கவனிக்கிறது. மற்ற தொழில்நுட்ப
கலைஞர்கள் விவரம் இன்னும் வெளியாகவில்லை.

ஆகஸ்டில் படப்பிடிப்பைத் தொடங்கி, அடுத்த ஆண்டில் ரிலீஸ் பண்ணப் போகிறார்களாம்.

தமிழ்-தெலுங்கு சினிமாவை அவமானப்படுத்துவதா?-காஜல் அகர்வாலுக்கு எதிராக திரையுலகம் கொந்தளிப்பு

Kajal Agarwal
தமிழ், தெலுங்கு சினிமாவையும் நடிகர் நடிகைகளையும் அவமதிக்கும் விதத்தில் பேட்டி அளித்த நடிகை காஜல் அகர்வால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், என ஒட்டுமொத்த திரையுலகமும் கொந்தளித்துள்ளது.

ஏன்.... அப்படி என்ன பண்ணார் காஜல்?

தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமா மூலம்தான் ஒரு நடிகையாக அடையாளம் காட்டப்பட்டார் வட இந்தியப் பெண்ணான காஜல்.

ஆனால், சமீபத்தில் ஒரு பாலிவுட் சினிமா நிகழ்ச்சியில் பேசிய அவர், "என்னை தமிழ் அல்லது தெலுங்கு நடிகை என்று சொல்ல வேண்டாம். அதை நான் விரும்பவில்லை. நான் வட இந்தியப் பெண் என்பதுதான் எனக்குப் பெருமை", என்றார்.

அவரது இந்தப் பேட்டி வட இந்திய சேனல்களில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்து டென்ஷனாகிவிட்டார்கள் தென்னிந்திய நடிகர் நடிகைகள். இன ரீதியான அவமானமாக இதை அவர்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக தெலுங்கு திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள், காஜல் அகர்வால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

"இந்தியில் சீண்டுவாரில்லை என்பதால்தானே, தமிழ் அல்லது தெலுங்குக்கு வந்தோம். இங்கே வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதையெல்லாம் யோசிக்கக் கூட மறுக்கிறார்கள் காஜல் அகர்வாலைப் போன்ற சிலர். காஜல் பேச்சு அநாகரீகமானது. தவறானது. இந்த ரோஷமும் உணர்வும் உள்ள அவர் எதற்கு தமிழ், தெலுங்கு சினிமாவில் நடிக்க வேண்டும்", என்று பொரிந்து தள்ளியுள்ளார் சக நடிகை ஒருவர்.

பதிலுக்கு பதில்...

இயக்குநர் ஸ்ரீதர் ரெட்டி கூறுகையில், "இரண்டு வாரத்துக்கு முன் ஹைதராபாதுக்கு வந்த காஜல் அகர்வால், இந்த ஊர் பிரியாணி, முத்துக்கள், ரசிகர்கள் எல்லாரையும் பிடிக்கும். ஐ லவ் ஹைதராபாத் என்றார். அடுத்த வாரம் சென்னையில் இருந்தார். அங்கே, ஒரு படத்துக்கு ஒப்பந்தமான அவர், ஐ லவ் சென்னை. இந்த ஊர் மாதிரி எதுவும் இல்லை, என்றெல்லாம் பேட்டியளித்தார். இது அவரது தொழில் நிர்ப்பந்தம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதேபோல ஐ லவ் மும்பை என்று சொல்லியிருக்கலாம்.

அதைவிட்டுவிட்டு, 'என்னை தென்னிந்திய நடிகை என்று சொல்வதில் பெருமையில்லை' என்று அவர் கூறியிருப்பது, அநாகரீகமானது. நம்மை அவமானப்படுத்தும் செயல். இதைவிட பெரிய அவமானத்தை அவர் பதிலுக்கு பெற வேண்டி வரும். நாங்களும் அவரை அப்படியே நடத்துவோம்," என்றார்.

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் கூறுகையில், "காஜல் தனது இன வெறியைக் காட்டியுள்ளார். சினிமாவுக்கு இது நல்லதல்ல. அவர் இங்கே நடிப்பது யாருக்குமே நல்லதல்ல. காஜலுக்கு வாய்ப்பு மறுப்போம்," என்றார்.

Thursday, June 16, 2011

அதிக நேரம் தொலைக்காட்சி முன் அமர்வதால் இதய நோய்கள் ஏற்படும்: ஆய்வில் தகவல்

  நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதால் நீரிழிவு நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளில் கூடுதல் 2 மணி நேரம் தொலைக்காட்சி முன்பாக உடல் உழைப்பு இல்லாமல் அமர்ந்திருக்கும் நபர்களுக்கு ஐந்தில் ஒரு பங்கு நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பும், 15 சதவீதம் இதய நோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இந்த புதிய ஆய்வு விபரம் ஐமா என்ற இதழில் வெளியாகி உள்ளது.
தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை குறைத்தால் டைப்-2 எனப்படும் நீரிழிவு நோயை குறிப்பிடத்தக்க அளவு தவிர்க்க முடியும். அதே போன்று இதய நோய்கள், முன்கூட்டிய மரணம் போன்றவற்றையும் தவிர்க்க முடியும்.
தொலைக்காட்சி பார்க்கும் போது அசையாமல் இருப்பதை போல கணணி நிகழ்வுகளில் பல மணி நேரம் ஈடுபடும் போதும் இதே நோய்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தொலைக்காட்சி பார்ப்பதால் ஏற்படும் நோய் நிலையை உறுதி செய்ய 8 பெரும் ஆய்வுகள் 1 லட்சத்து 75 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்டன.
2 மணி நேரத்திற்கு மேல் தினமும் தொலைக்காட்சியைப் பார்ப்பதால் நீரிழிவு நோய், இதய நோய் பிரச்சனைகள் வருகின்றன. 3 மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சியை தினமும் உட்கார்ந்து பார்ப்பவர்களுக்கு முன்கூட்டியே மரணம் நிகழலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
உடல் உழைப்பு இல்லாததால் பிரச்சினைகள் மோசமாக இருக்கும் என நீரிழிவு நோய் ஆய்வாளரான பிரிட்டனின் டொக்டர் லெய்ம் பிரேம் கூறினார். தொலைக்காட்சியைப் பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொது சுகாதாரத்திற்கான கர்வர்டு பள்ளியின் பேராசிரியர் பிராங்ஷீ கூறினார்.
தொலைக்காட்சியை பல மணி நேரம் பார்ப்பதால் உடல் பருமன் ஏற்படுகிறது. ஆய்வாளர்கள் கருத்துப்படி ஐரோப்பிய நாடுகளில் வாழும் நபர்கள் தினமும் 3 மணி நேரம் தொலைக்காட்சியை பார்க்கிறார்கள். தொலைக்காட்சி முன்பாக அதிக நேரம் அமரும் நபர்கள் வரிசையில் அமெரிக்கர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். அவர்கன் தினமும் 5 மணி நேரம் வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக பெற

இணையத்தில் கட்டண மென்பொருளுக்கு இணையாக வேலை செய்யும் அளவிற்கு இலவச மென்பொருட்கள் இருந்தாலும் அனைவரும் கட்டண மென்பொருளையே விரும்புவார்கள்.
ஏனென்றால் கட்டண மென்பொருளில் வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காது மற்றும் நம்முடைய மின்னஞ்சல் கொடுத்து தரவிறக்கம் செய்தால் அந்த மின்னஞ்சலை பல spam நிறுவனங்களுக்கு விற்று விடுவதால் நமக்கு தேவையில்லாத மின்னஞ்சலில் வந்து தொந்தரவு செய்யும் அபாயங்கள் இருப்பதோடு கட்டண மென்பொருளில் ஒரே மென்பொருளில் பல வேலைகள் செய்யும் வசதி இருக்கும். ஆனால் பெரும்பாலான இலவச மென்பொருட்களில் இருக்காது. ஆகவே அனைவரும் கட்டண மென்பொருட்களை விரும்புகின்றனர்.
இப்படிபட்டவர்களுக்கான ஒரு இலவச தளம் உள்ளது. மென்பொருட்களை உங்கள் மின்னஞ்சலுக்கே அனுப்பி வைப்பார்கள். இது மிகவும் பிரபலமான தளம். இந்த தளத்தில் தினமும் ஒரு கட்டண மென்பொருளை இலவசமாக அறிமுகப்படுத்துவார்கள்.
அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய 24 மணி நேரம் கால அவகாசம் கொடுப்பார்கள். அதற்குள் அந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
24 மணி நேரம் கழித்து தரவிறக்கம் செய்தால் அந்த மென்பொருளை இலவசமாக பெற முடியாது. காசுகொடுத்து தான் வாங்க வேண்டும் ஆக முந்தி கொள்வதே நல்லது.
இந்த தளத்தில் நாம் உறுப்பினர் நம் மின்னஞ்சலை கொடுத்து பதிந்து விட்டால் அந்த நாளுக்கான இலவச மென்பொருளை பற்றி நமது மின்னஞ்சலுக்கே அனுப்பி விடுவார்கள். அந்த லிங்கில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தரவிறக்கம் செய்து நிறுவச் செய்ததும் கொடுக்கப்படும் ஆக்டிவேசன் கீயை மறக்காமல் கொப்பி செய்து மென்பொருளை register செய்து கொண்டால் தான் காலம் முழுவதும் இலவசமாக மென்பொருளை உபயோகிக்க முடியும்.
ஆனால் இந்த முறையில் உள்ள ஒரு குறை நாம் மென்பொருளை நிறுவச் செய்யும் அந்த பதிப்பில் இருந்து புதிய பதிப்பை அப்டேட் செய்ய முடியாது. அப்டேட் செய்ய வேண்டுமென்றால் காசு கொடுத்து ஆகவேண்டும்.
இந்த தளத்தில் சைட்பாரில் உள்ள விட்ஜெட்டில் subscribe by Email என்பதை க்ளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் மின்னஞ்சலை கொடுத்து பதிந்து கொண்டால் உங்கள் மின்னஞ்சலுக்கே தினமும் ஒரு இலவச மென்பொருளை பற்றி செய்தி அனுப்புவார்கள்.

புற்றுநோயை தடுக்க உதவும் உலர் பழங்கள்

உலர் பழங்கள் புதிய பழங்களைப் போலவே சத்துள்ளதாக திகழ்கின்றன. இந்த உலர் பழங்கள் புற்றுநோயை எதிர்க்கவும், இதய நோய்களை தவிர்க்கவும் உதவுகின்றன.
அது மட்டுமல்லாமல் வளர்சிதை மாற்ற நோய்களை தவிர்க்கவும் உதவுகிறது. உலர் பழங்களில் நார்ச்சத்து நிறைந்து உள்ளது. அதே போன்று வைட்டமின்கள், தாதுச்சத்துக்களும் உள்ளன.
முறைப்படியான உணவு வகைகளில் உலர் பழங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க பிரிட்டன், அமெரிக்கா நாடுகள் பரிந்துரை அளித்துள்ளன.
மினோசாட்டா பல்கலைகழக ஆய்வாளர் மருத்துவர் டேனியர் காலேசர் கூறுகையில்,"உலர் பழங்களில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன" என்றார்.
லீட்ஸ் பல்கலைகழக ஆராய்ச்சியாளர் மருத்துவர் காரிவில்லியம்சன் கூறுகையில்,"தாவர பாலி பீனால் இதயநோயை தவிர்க்க உதவுமா என்ற சிறு சந்தேகம் உள்ளது" என்றார்.
உலர் பழங்கள் உள்பட சில பழங்களில் குறிப்பிட்ட வகை பாலி பீனால்கள் உள்ளன. அவை உடல்நலனுக்கு உதவும் செயல்பாட்டை அவதானித்துக் கொண்டு இருக்கிறோம் என ஏதென்சில் உள்ள ஹாரோ சோபியோ பல்கலைகழக மருத்துவர் ஆண்ட்ரியனா காலியோரா கூறினார்.
சிலவகை புற்றுநோய்களை தவிர்க்க உலர் பழங்கள் உதவுகின்றன என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே நார்த் வேல்சின் பான்கோர் பல்கலைகழக ஆய்வாளர்கள் கூறுகையில்,"பழச்சாறில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. கூடுதல் எடை மற்றும் உடல்பருமன் உள்ளவர்களுக்கு பழச்சாறுகளின் பலனில் பெரும் தாக்கம் இல்லை" என்றனர்

விண்டோஸ் 8 பற்றிய புதிய தகவல்கள்

தன் அடுத்த ஓபரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் நடைபெற்ற தொழில்நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது.
தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார். தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில் விண்டோஸ் 8 குறைந்த மின்சக்தியில் இயங்கும் ஏ.ஆர்.எம்.சிப்களில் செயல்படக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது.
திரை தொட்டு இயக்கும் திறனும், எச்.டி.எம்.எல் 5 தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படும் திறனும் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்குப் பயன்படும் விடயங்களில் முதலாவதாக விண்டோஸ் 8 சிஸ்டம் இயங்க இப்போது விண்டோஸ் 7 பயன்படுத்தும் கணணிகளை மாற்ற வேண்டிய தேவை இருக்காது.
ஏற்கனவே விஸ்டா சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதனை இயக்க புதிய வன்பொருள் சாதனங்களுடன் கூடிய கணணி தேவை என்ற கட்டாயத்தினை மைக்ரோசாப்ட் முன்வைத்ததனால் விஸ்டா கணணி பயனாளர்களிடம் சென்றடையாமல் போனது.
அந்த தவற்றை மீண்டும் செய்திடாமல் இந்த முறை மைக்ரோசாப்ட் விழித்துக் கொள்கிறது. எனவே கோடிக்கணக்கான கணணிகள் விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு எளிதாக மாறிக் கொள்ளலாம். வன்பொருள் தேவைக்கென செலவு இருக்காது.
புதிய கணணி வாங்கினால் தான் விண்டோஸ் 8 பயன்படுத்த முடியும் என்ற நிலையை உருவாக்கி புதிய சிஸ்டம் மக்களிடம் செல்லாத ஓர் சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடாது என மைக்ரோசாப்ட் மிகக் கவனமாக இம்முறை செயல்படுகிறது.
அடுத்ததாக விண்டோஸ் 8 பயன்படுத்த இருக்கும் யூசர் இன்டர்பேஸ் எனப்படும் பயன்படுத்துபவருக்கும் ஓபரேட்டிங் சிஸ்டத்திற்கு இடையே உள்ள செயல்பாட்டை எளிதாக்கும் வழி முறை ஆகும். இதனை Immersive UI என மைக்ரோசாப்ட் அழைக்கிறது.
"கவனத்தை முழுவதும் கவர்ந்த இடைமுகம்" என்பது இதன் பொருள். புதிய மற்றும் பழைய வன்பொருள் கொண்ட கணணி அனைத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு இயங்கும்படி இது அமைக்கப்படுகிறது. இந்த இடைமுகம் சரிப்பட்டு வராது என எண்ணுபவர்கள் வழக்கம்போல தற்போதைய ஏரோ வகை இடைமுகத்தினைப் பயன்படுத்தலாம்.
விண்டோஸ் 8 சிஸ்டம் தொடுதிரையில் தொட்டு இயக்கும்படியாக அமைக்கப்படுகிறது. எனவே இதன் முழுப் பயனும் தொடுதிரை உள்ள மொனிட்டர்களைக் கொண்டு கணணிகளை இயக்குபவர்களுக்குக் கிடைக்கும். தொடுதிரை செயல்பாடு மட்டுமின்றி பல வகையான சென்சார் செயலாக்கமும் இந்த ஓபரேட்டிங் சிஸ்டத்தில் தரப்பட்டுள்ளது.
இதனால் மோஷன் செயலாக்கம், திரைக்கு அருகில் செல்லும் தூரம் ஆகியன மூலமும் சில பயன்பாடுகள் கிடைக்கும். தொடுதிரை மொனிட்டர்கள் இல்லாதவர்களுக்கு வழக்கம் போல பயன்பாட்டினை மேற்கொண்டு அனுபவிக்கலாம்.
புதிய இடைமுகத்தில் பெரிய அளவில் வண்ணங்களில் ஐகான்கள் அமைக்கப்படுகின்றன. விண்டோஸ் போன் 7 ஓபரேட்டிங் சிஸ்டத்தில் தரப்படும் தொழில்நுட்பமும் தோற்றமும் இந்த வகையில் தரப்படுகின்றன. இருப்பினும் தற்போதைய பழக்கப்படி மவுஸ் மற்றும் கீ போர்டு மூலமும் சிஸ்டத்தினை இயக்கலாம்.
பேஜ் அப் மற்றும் பேஜ் டவுண் கீகள் மூலம் அப்ளிகேஷன் டைல்ஸ் இடையே செல்லலாம். ஒரு மவுஸ் கிளிக் மூலம் இவற்றை இயக்கலாம். கீ போர்டில் இப்போது போல ஷார்ட் கட் கீகள் மூலமும் இயக்கலாம்.
இருப்பினும் சில விடயங்களை இப்படித் தான் இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் கூறி வருகிறது. மொனிட்டர் திரை விண்டோஸ் 8 சிஸ்டத்தின் முழுமையான பயன்களைப் பெற வேண்டும் என்றால் திரை 16:9 என்ற வகையில் ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டு அமைக்கப்பட வேண்டும். 1366x768 என்ற ரெசல்யூசனுக்குக் குறையாமல் திரை இருக்க வேண்டும்.
1024x768 என்ற ரெசல்யூசனில் உள்ள திரைகளிலும் இந்த சிஸ்டத்தின் பயன்பாடுகள் கிடைக்கும் என்றாலும் 1366x768 என்ற வகைதான் சிறப்பான பயன்பாட்டினைத் தரும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது.
விண்டோஸ் 8 எப்போது வெளியாகும் எனச் சரியான திகதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் எப்படியும் 2012ல் வெளியாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே விண்டோஸ் 8 ஓபரேட்டிங் சிஸ்டம் வரும் போது அதனைத்தான் பயன்படுத்த வேண்டும் என விரும்பும் வாடிக்கையாளர்கள் இப்போதே மேலே கூறப்பட்ட மொனிட்டர்களையும், தற்போதுள்ள வன்பொருளுக்கு சற்று கூடுதலான திறன் கொண்ட கணணிகளையும் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

ஞாபக சக்தியை அதிகரிக்கும் பட்டை

உணவில் வாசனை மற்றும் ருசிக்காக பட்டை, லவங்கம், ஏலம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுகிறது. இவற்றில் மருத்துவ பயன்களும் உள்ளது என்பதை அறியாதவர்களும் உண்டு.
உணவு எளிதில் செரிமானம் ஆவதற்கு இந்தப் பொருட்கள் பயன்படுகிறது என்று கூறுவார்கள். ஆனால் பட்டையில் உள்ள மூலப்பொருள் மறதி நோய்க்கு மருந்தாக இருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சரியான அளவில் அதற்கான முறையில் உட்கொள்ளப்படும் பட்டை மறதிக்கு நோயை பறந்தோடச் செய்துவிடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். டெல்அவிவ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இது குறித்த சிறப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். பேராசிரியர் மைக்கேல் ஒவாடியா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தான் பட்டையின் பெருமை தெரியவந்தது.
மறதி நோய்க்கான காரணமும் தீர்வும் என்ற தலைப்பில் நடந்த ஆய்வு முடிவில் வெளியாகி உள்ள தகவல்கள்: உணவில் ருசி மற்றும் வாசனையை அதிகரிக்கவும், எளிதில் செரிமானமாவதற்கும் சேர்க்கப்படும் தாவரப் பொருளான பட்டை மறதி நோய்க்கும் மருந்தாகிறது.
பட்டையில் உள்ள பி-ஆமிலாய்ட் பாலிபெப்டைட் ஆலிகோமர்ஸ் என்ற மூலப்பொருள் மூளையில் மறதி நோய்க்கு காரணமான பி-ஆமிலாய்ட் பிப்ரில்ஸ் என்ற பக்டீரியாவை தாக்கி அழிக்கிறது.
இந்த பக்டீரியாக்கள் மூளையில் உள்ள நியூரான்களை அதிக அளவிலும் விரைவிலும் அழிக்கும் திறன் கொண்டவை. இவற்றை கட்டுப்படுத்தி அழிப்பதால் நோய்த் தாக்குதல் பெருமளவு குறையும்.
மறதி நோய் உள்ளவர்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்களும்கூட பட்டையை தேவையான அளவு உட்கொள்ளலாம். அதே நேரத்தில் நாள் ஒன்றுக்கு 10 கிராம் என்ற அளவுக்கு மிகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்

அல்கொய்தா இயக்கத்தின் புதிய தலைவராக ஜவாஹிரி தெரிவு

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் புதிய தலைவராக அல் ஜவாஹிரி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அல்கொய்தா வெளியிட்டுள்ள அறிக்கை அந்த இயக்கத்தின் இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.
அந்த அறிக்கையில்,"ஜவாஹிரி தலைமையில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களுக்கு உதவும் நாடுகளுக்கு எதிரான புனிதப் போர் தொடரும். இஸ்லாமிய மண்ணை ஆக்கிரமித்துள்ளவர்கள் வெளியேறும் வரை எங்கள் போர் தொடரும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 2ம் திகதி அல்கொய்தாவின் தலைவரான பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து அந்த இயக்கத்தில் இரண்டாம் நிலை தலைவராக இருந்து வந்த அல் ஜவாஹிரி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

ஐக்கிய ராஜ்ஜியத்தில் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட ஒரு தொகுதி தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் வியாழன் மாலை இலங்கை கொண்டு செல்லப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதில் சுமார் 40 தமிழர்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக இருந்தது. இவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் கொழும்புக்கு அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது.
இது தொடர்பாக பிபிஸி தெரிவித்துள்ளதாவது:
அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை மீண்டும் அங்கு அனுப்பப்படக் கூடாது என்று மனித உரிமை அமைப்புக்களோடு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் இணைந்து குரல் எழுப்பியிருந்தாலும், இது தொடர்பில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. காரணம் ஏதும் தெரிவிக்கப்படாமல் ஒரு சிலரை திருப்பி அனுப்பும் நடவடிக்கை இறுதி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளது.
இருந்தும் பெரும்பான்மையானோர் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார்கள். இந்த விடயம் தொடர்பாக பிரிட்டிஷ் நாடாளுமன்ற மக்களவையில் ஒரு விவாதத்துக்கு தான் விடுத்த கோரிக்கையை, சபாநாயகர் ஏற்க மறுத்துவிட்டார் என்று மக்களவை உறுப்பினர் சியோபான் மெக் டோனா தெரிவித்தார்.
திருப்பி அனுப்பப்படுபவர்களில் ஒரு சிலரின் பாதுகாப்புக்கு பங்கம் வரலாம் என்று, தான் அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தான் இலங்கைக்கு அனுப்பப்படுவதை எதிர்த்து 30 வயதுடைய தமிழ் இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக அவரின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
நாடு கடத்தப்படவிருந்த தமிழ் இளைஞர் ஒருவர் தனக்குத் தானே தீமை இழைத்துக் கொள்ள முயன்றதாகவும் அதன் பின் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும் உறுதி செய்துள்ள குடிவரவு அதிகாரிகள் தற்போது பிரயாணம் செய்ய ஏற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய ராஜ்ஜியம் தனது சர்வதேசக் கடமைகளை மிகவும் முக்கியமாக எடுத்துக் கொள்வதாகவும், ஒரு நபர் தனக்கு சர்வதேச பாதுகாப்பு வேண்டும் என்பதை உணர்த்தினால் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று குடியரவுத் துறை அமைச்சர் டேமியன் கிரின் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சென்றால் தமக்கு பாதிப்பு வரும் என்று தெரிவித்த சில தஞ்சம் கோரிகள், அங்கு தமக்கு கருணா குழுவால் அச்சம் ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அது போன்ற அச்சங்கள் தேவையற்றது என்று அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

2012ஆம் ஆண்டில் உலகம் அழிந்து விடும்: பிரான்ஸ் நிபுணர்கள் எச்சரிக்கை

இந்த உலகம் அழியும் என்ற கணிப்பை பயன்படுத்தி ஆதாயம் தேட யாரும் முயற்சிக்க கூடாது என பிரான்ஸ் மத அமைப்புகள் மிஷன் அறிவுறுத்தி உள்ளது.


உலகம் அழியப் போகிறது என பைபிளின் கணிப்பின் படி இந்த ஆண்டு மே மாதம் உலகம் அழியும் என முதலில் ஒரு கருத்து பரவியது. இந்த கணிப்பு முதலில் உலக நாடுகளில் உள்ளவர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

ஆனால் அந்த கருத்து பொய் என எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இந்த ஆண்டு மே மாதம் முடிந்து ஜீன் மாதத்தின் மத்தியில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். பழைய பீதி மறைந்த நிலையில் புதிய கணிப்பு மக்களை அச்சபட வைத்து உள்ளது.


தற்போது மாயா மக்கள் அட்டவணைப்படி உலகம் வருகிற 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21ந் திகதி அழியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த உலக அழியும் என்ற அறிவிப்பை கேட்டு பைரீனிஸ் மலைப்பகுதியல் ஒரு பதுங்கு குழியில் பதுங்கி இருக்க முயற்சிப்பதாகவும் மாயா தரப்பு மக்கள் கூறுகிறார்கள்.

உளவியல் ரீதியாக பயத்திற்கு உள்ளான மக்கள் உலகம் அழியப் போகிறது என்ற கருத்தை பரப்புபவர்களின் செயல்பாட்டுக்கு இரையாவார்கள் என மிஷன் தலைவர் ஜார்ஜ் பினெக் கூறினார்.

ரோமானிய பேரரசு வீழ்ச்சி அடைந்த பின்னர் 2012ஆம் ஆண்டில் 183வது நாளில் உலகம் அழியும் என்ற கணிப்பு உள்ளது. முந்தைய யுகங்களைப் போலவே இந்த புது கணிப்பும் பொய்த்து போகும் என பகுத்தறிவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆனால் உலகம் உடைந்து விடும், நாம் உயிர் பிழைக்க வேண்டும் என கருதும் சிலர் தப்பிக்க மலை போன்ற இடங்களில் இடம் தேடுகிறார்கள்

உடல் வெப்பத்தை தணிக்கும் எலுமிச்சை

எலுமிச்சை பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் பழம், காய், இலை என அனைத்துமே மருத்துவத்திற்கு பயன்படுகிறது.
இதில் செடி, கொடி என்று இரண்டு வகைகள் உண்டு. புளிப்புச்சுவை கொண்ட எலுமிச்சை, குளிர்ச்சியானது. பசியைத் தூண்டி நா வறட்சியைப் போக்கும். இயற்கையாகக் கிடைக்கும் வைட்டமின் சி இதில் நிறைய உண்டு. அதுமட்டுமில்லாமல் இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்களும் உண்டு.
வெயில் காலங்களில் வெளியில் சென்று வந்த உடன் நிறைய பேருக்கு தலைவலி ஏற்படும். எலுமிச்சை பழத்தின் தோலை நன்றாக காய வைத்து பவுடர் போல அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தலைவலி வரும் போது இந்தப் பவுடரை தண்ணீரில் கரைத்து வலி இருக்கும் இடங்களில் தடவி வந்தால் இந்த பசை குறையும் போது தலைவலி குறைந்து விடும்.
கோடைகாலத்தில் சிலருக்கும் வியர்க்குரு மற்றும் கட்டிகள் வரும். அதற்கு எலுமிச்சை மிகச் சிறந்த மருந்து. எலுமிச்சை சாற்றில் சந்தனத்தை அரைத்து தடவினால் வியர்க்குருவும், வேனல் கட்டியும் சரியாகும்.
வெயில் காலங்களில் அதிகளவு எலுமிச்சை சாறு பருகுவது நல்லது. உடல் வெப்பத்தை தணிப்பதற்கு பயன்படுகிறது.

Wednesday, June 15, 2011

ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருது பெறவில்லை-ஆஸ்கர் குழு பதில்

வாஷிங்டன்:  இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கவில்லை என்று ஆஸ்கர் குழு தெரிவித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வாங்கினார். ஆனால் அவர் அதை பணம் கொடுத்து வாங்கியதாக இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை ஆஸ்கர் குழு மறுத்துள்ளது.

இது குறித்து அந்த குழு கூறியதாவது,

ஆஸ்கர் விருதுக்கு தவறான நபரை குழு தேர்ந்தெடு்த்துள்ளது என்று ஒருவர் குறை கூறுவது புதிதல்ல. ஆனால் ஒருவர் தவறான வழியில் விருதை வாங்கியுள்ளார் என்று கூறுவது ஆதாரமற்றது, நம்ப முடியாதது.

எங்களுக்கு இஸ்மாயில் தர்பார் பற்றி தெரியாது. அவர் எந்த ஆதாரத்தை வைத்து ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருதை வாங்கியதாகக் கூறுகிறார் என்று தெரியவில்லை என்று அகாடமி பத்திரிக்கையாளர் டெனி மெலிடோனியன் தெரிவித்தார்.

கடந்த வாரம் இந்த குற்றச்சாட்டு எழுந்தபோது அதை கேலியான விஷயம் என்று எடுத்துக் கொண்டதால் அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை என்றார்.

இது குறித்து ஆஸ்கர் குழு வேலும் கூறுகையில்,

வாக்கெடுப்பு முறையில் தான் விருது வழங்கப்படுகிறது. அகாடம் அதிகாரி யாராவது குளறுபடி செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட முடியாத அளவுக்கு பாதுகாப்பாகத் தான் நடத்தப்படுகிறது.

பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் அலுவலகம் தான் இசை பிரிவுக்கான வாக்கெடுப்பைக் கவனித்து வருகிறது என்று தர்பாருக்கு தெரியாது.

விருது பெறுபவர்களின் பெயர்கள் இருக்கும் கவர்களை 2 அதிகாரிகள் தயார் செய்வார்கள். மேடையில் அந்த கவர்களைத் திறக்கும் வரை அது அவர்கள் பாதுகாப்பில் தான் இருக்கும் என்று கூறியுள்ளது.

இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் கூறிய குற்றச்சாட்டு,

கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை வாங்கியதில் சந்தேகமாக உள்ளது. விளம்பரத்துக்காக அவர் பணம் கொடுத்து இந்த விருதுகளை வாங்கியுள்ளார் என்றே நினைக்கிறேன்.

உண்மையிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் திறமை உள்ளவர் என்றால் ரோஜா அல்லது பம்பாய் படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி இருக்க வேண்டியதுதானே? அவர் பணம் கொடுத்துதான் விருது வாங்கினார் என்று எனக்குத் தெரியும், என்றார்.