Monday, December 19, 2011

வேலாயுதம் திடுக்கிடும் தகவல்

  வேலாயுதம் மாபெரும் வெற்றித் திரைப்படம் என படம் வெளியாகி நான்கு நாட்களிலேயே வெற்றிக்கொண்டாட்டம், பத்திரிகையாளர் சந்திப்பு என படத்தின் நாயகனும் இயக்குனரும் பட்டையைக் கிளப்பினர். 

தற்போது படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்த நிலையில் இப்படத்தின் ஒரு காட்சி கூட எந்த திரையரங்கிலும் இல்லையாம். இந்நிலையில் படத்தினை பற்றி மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் உலவுகிறது. 

படம் வெளியான ஒரு வாரத்தில் மட்டுமே படம் கல்லா கட்டியதாம். பின்பு படத்தின் வசூல் நிலைமை சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லையாம். அத்துடன் சுமார் 50 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரையில் 40 கோடியினையே வசூலாக பெற்றிருக்கிறதாம். இனியும் இப்படத்தின் மூலம் வருமானம் ஈட்டமுயாது என்ற நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பெரும் மனக் கவலையில் இருக்கிறாராம். 

ஆனால் இது குறித்து ஜெயம் ராஜாவோ, விஜயோ இதுவரையில் பெரிதாக அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. ஹிந்தியில் இப்படத்தினை ஆஸ்கார் ரவி படமாக்க எடுத்த முயற்சிக்கு ராஜா உடன்படவில்லை என்பதாலே தயாரிப்பு தரப்பிலிருந்து இவ்வாறான எதிர்மறையான தகவல் வெளியாகியுள்ளதாக ராஜா கூறுகிறாராம். 

போகிற போக்கை பார்த்தால் விஜய் வெற்றி என்ன விலை என்று கேட்பாரோ? 

No comments:

Post a Comment