![]() |
Tuesday, February 28, 2012
உலகையே அதிர்ச்சியில் அழ்த்தியுள்ள வேற்றுக்கிரக விமானம்
Wednesday, February 22, 2012
இலங்கையில் ஒரு கண்ணை இழந்த துணிச்சல் மிக்க செய்தியாளர் மேரி கொல்வின் கொலை

2001ஆம் ஆண்டில் இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற மோதலில் மேரி கொல்வின் தனது கண்களில் ஒன்றை இழந்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளரான இவர், பிரித்தானியப் பத்திரிகை ஒன்றுக்காகச் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த போதே கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவருடன் Remi Ochlik என்ற புகைப்படப்பிடிப்பாளரும் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது கொல்லப்பட்டார்.
சிரியாவின் ஹொம்ஸ் நகரில் இவர்கள் தங்கியிருந்த வீடு கடுமையான எறிகணைத் தாக்குதலுக்கு இலக்கானது. அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு இருவரும் முற்பட்டபோது றொக்கட் தாக்குதலுக்கு இலக்காகி அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.
மேரி கொல்வின் மகத்தான ஊடகவியலாளர். ஊடகத்துறைக்கு பெருமை சேர்த்தவர். அமெரிக்காவில் பிறந்தவர். பிரிட்டிஷ் சண்டே டைம்ஸ் செய்தியாளர். சிரியாவிலே சர்வாதிகாரி அசாத்தின் படைகளால் அவர் இன்று கொல்லப்பட்டுவிட்டார்
மேரி நமது நாட்டிற்கு பழக்கமானவர். எனக்கும் நன்கு அறிமுகமானவர். உலகில் எங்கெங்கு போர் நடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று, குண்டு வீச்சு மழைக்கு மத்தியில், பலருக்கு முடியாத, எவரும் துணியாத, பல தகவல்களை படங்களுடன் திரட்டி உலகிற்கு வழங்கிய வீரமங்கை அவர்.
இலங்கை போர் தொடர்பிலே துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு கண்ணையும் நம் நாட்டிலேயே இழந்தவர். நமது துன்பங்களை உலகறிய செய்த வீரமங்கை அவர்.
மகத்தான மனிதர்கள் சாவதில்லை. ஏனென்றால் ஆபத்து வருகின்றது என்று அறிந்த நிலையிலும் தாம் வகுத்துக்கொண்ட பாதையில் துணிச்சலுடன் செயல்படுபவர்கள்தான் மகத்தான மனிதர்கள்.
மேரி கொல்வினும் ஆபத்து மிக்க தனது தொழிலில் ஒரு நாள் சாவு வரும் என்று அறிந்தே இருந்தார். ஆகவே அவர் சாகவில்லை. மகத்தான மனிதர்களுக்கு மரணம் கிடையாது. அவர்கள் நாமம் வாழும். அவர்களது சாதனைகள் வாழ்ந்துகொண்டே இருக்கும்.
எதிர்காலத்தில் தோன்றபோகும் எத்தனையோ இளம் ஆண்-பெண் ஊடகவியலாளர்களின் ஊடாக மேரி வாழ்வார். உலகம் உள்ளவரை வாழ்வார்.

Subscribe to:
Posts (Atom)