inuvil boys
Saturday, January 26, 2013
Thursday, March 22, 2012
மகளும் தகப்பன்னும் அரட்டை : காட்டிக்கொடுத்த web காமரா!
[ Thursday, 22 March 2012, 10:28.28 AM. ] |
![]() ஊர் தெரியாது, நிறம் தெரியாது, இனம் தெரியாது இப்படியாகத் தான் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் சட்டிங் மூலம் தங்கள் உறவை முதலில் ஆரம்பிக்கின்றனர். பின்னர் தான் அது நாளொரு பொழுதும் பொழுதொரு மேனியுமாக வளர்ந்து காதல் உருவாகின்றது. இங்கேயும் ஒரு பெண் முகம் தெரியாத ஆணோடு ஒன்லைன் சட்டிங் மூலம் உறவை ஆரம்பிக்கிறார். அடுத்த கட்டமாக வெப் கமராவை ஒன் பண்ணி பேச முயலும் போது அந்த அதிர்ச்சி அரங்கேறுகிறது. வேறொரு நாட்டிலுள்ள மகளை வித்தியாசமான கோலத்தில்பார்த்து அதிர்கிறார் தகப்பன். அருகில் மனைவி புரண்டு படுக்கிறார். இதிலுள்ள விசேட அம்சம் என்னவென்றால் பெண்ணோடு வீடியோவில் பேச முதல் மொட்டந் தலைக்கு விக் மாட்டுகிறார் இந்த தகப்பன். அப்பா மகளுக்கிடையிலான சங்கடத்தை பார்த்தீர்களா? |
12 மணித்தியாலங்களில் 14 உலகச்சாதனையை நிகழ்த்திய வீரர்
![]() அறக்கட்டளை ஒன்றிற்காக அவர் இந்த சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் 12 மணித்தியாலங்களுக்குள் 14 சாதனைகளைப் படைத்துள்ளமை சிறப்பானதாகும். ![]() அவரது சாதனைகளுள் சூடான சொக்லேட் பானத்தை விரைவாக அருந்துவது, அதிக பட்டாணிகளை கொக்ரெய்ல் தடியைக் கொண்டு 30 செக்கன்களுக்கு உண்பது, ஒரு மணித்தியாலத்தில் அதிக பேஸ்புக் லைக்குகளை செய்வது ஆகியன உள்ளடங்குகின்றன. சூடான சொக்லேட் பானத்தை 5.45 செக்கன்களில் அருந்திய அன்ட்ரூ பிளின்டொப், ஒரு மணித்தியாலத்தில் 52,719 லைக்களை செய்தும், 38 பட்டாணிகளை உண்டும் கின்னஸ் சாதனை படைத்தார். ![]() இவை தவிர 30 செக்கன்களில் அதிக முத்தங்கள் - 40 முத்தங்கள், விசைப்படகில் 100 மீற்றரை வேகமாக கடந்தமை - 1 நிமிடம், 58.62 செக்கன்கள் (முன்னாள் வீரர் ஸ்ரிவ் ஹார்மிசனுடன் இணைந்து), அதிகம் பேர் இணைந்து பார்ட்டி வெடிப்பான்களை வெடித்தமை - 420 பேர், 20 பேருக்கு விரைவாக ஐந்து போடுதல் (ஹை பைஃவ்) - 6.53 செக்கன்கள், ஒரு நிமிடத்தில் அதிக கிரிக்கட் பந்துகளைச் சந்தித்தமை - 19 பந்து வீச்சுக்கள், காரில் வேகமாக மூன்று புள்ளித் திருப்பத்தை ஏற்படுத்தியமை(14.01 செக்கன்கள்) போன்ற சாதனைகளையும் அவர் படைத்தார். ![]() ![]() ![]() |
Friday, March 9, 2012
அமெரிக்க யுவதி ஒருவர் தமிழில் பாட்டுப் பாடி அசத்துகின்றார்.
![]() |
அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்
![]() கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார். தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான். கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர். தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவுபெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று 'ப்ளூம் பாக்ஸ்' என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸ் தயார் செய்துள்ளார். சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம்.அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள்ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்'' என்கிறார் ஸ்ரீதர். ஒரு 'ப்ளூம் பாக்ஸ்' உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம். இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. 'ப்ளூ பாக்ஸ்' மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால் மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது Fedex, E bay, கோக்கா கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. 100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் E bay நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் E bay. இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த 'ப்ளூம் பாக்ஸ்' இருக்கும் சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்'' என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ![]() ![]() ![]() ![]() |
Tuesday, February 28, 2012
உலகையே அதிர்ச்சியில் அழ்த்தியுள்ள வேற்றுக்கிரக விமானம்
![]() |
Wednesday, February 22, 2012
இலங்கையில் ஒரு கண்ணை இழந்த துணிச்சல் மிக்க செய்தியாளர் மேரி கொல்வின் கொலை

2001ஆம் ஆண்டில் இலங்கையின் வடக்கில் இடம்பெற்ற மோதலில் மேரி கொல்வின் தனது கண்களில் ஒன்றை இழந்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளரான இவர், பிரித்தானியப் பத்திரிகை ஒன்றுக்காகச் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த போதே கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவருடன் Remi Ochlik என்ற புகைப்படப்பிடிப்பாளரும் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது கொல்லப்பட்டார்.
சிரியாவின் ஹொம்ஸ் நகரில் இவர்கள் தங்கியிருந்த வீடு கடுமையான எறிகணைத் தாக்குதலுக்கு இலக்கானது. அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு இருவரும் முற்பட்டபோது றொக்கட் தாக்குதலுக்கு இலக்காகி அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.
மேரி கொல்வின் மகத்தான ஊடகவியலாளர். ஊடகத்துறைக்கு பெருமை சேர்த்தவர். அமெரிக்காவில் பிறந்தவர். பிரிட்டிஷ் சண்டே டைம்ஸ் செய்தியாளர். சிரியாவிலே சர்வாதிகாரி அசாத்தின் படைகளால் அவர் இன்று கொல்லப்பட்டுவிட்டார்
மேரி நமது நாட்டிற்கு பழக்கமானவர். எனக்கும் நன்கு அறிமுகமானவர். உலகில் எங்கெங்கு போர் நடக்கின்றதோ அங்கெல்லாம் சென்று, குண்டு வீச்சு மழைக்கு மத்தியில், பலருக்கு முடியாத, எவரும் துணியாத, பல தகவல்களை படங்களுடன் திரட்டி உலகிற்கு வழங்கிய வீரமங்கை அவர்.
இலங்கை போர் தொடர்பிலே துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு கண்ணையும் நம் நாட்டிலேயே இழந்தவர். நமது துன்பங்களை உலகறிய செய்த வீரமங்கை அவர்.
மகத்தான மனிதர்கள் சாவதில்லை. ஏனென்றால் ஆபத்து வருகின்றது என்று அறிந்த நிலையிலும் தாம் வகுத்துக்கொண்ட பாதையில் துணிச்சலுடன் செயல்படுபவர்கள்தான் மகத்தான மனிதர்கள்.
மேரி கொல்வினும் ஆபத்து மிக்க தனது தொழிலில் ஒரு நாள் சாவு வரும் என்று அறிந்தே இருந்தார். ஆகவே அவர் சாகவில்லை. மகத்தான மனிதர்களுக்கு மரணம் கிடையாது. அவர்கள் நாமம் வாழும். அவர்களது சாதனைகள் வாழ்ந்துகொண்டே இருக்கும்.
எதிர்காலத்தில் தோன்றபோகும் எத்தனையோ இளம் ஆண்-பெண் ஊடகவியலாளர்களின் ஊடாக மேரி வாழ்வார். உலகம் உள்ளவரை வாழ்வார்.

Subscribe to:
Posts (Atom)